Saturday, March 7, 2009

ரஹ்மான் மற்றும் ஆஸ்கர்-சில சுவாரஸ்யங்கள்



காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரப் பாடல் ஆஸ்கர் விருது பெற்ற
"ஜெய் ஹோ" பாடலின் மெட்டிலேயே அமைந்துள்ளது.



அமெரிக்கர்களின் வானொலியில் அடிக்கடி ஒலிப்பது "ஜெய் ஹோ" பாடலின்
ஆங்கில மொழியாக்கம்.





அமெரிக்கப் பள்ளிகள் ஒரு சிலவற்றில் வினாத்தாளில் சில வினாக்களில் இடம் பெறும் பெயர் "ஜமால்" எனும் பெயர்(இது தான் SlumDog Millionaire படத்தில் ஹீரோவின் பெயர்)



உலகப் புகழ் பெற்ற Michael Jackson, ரஹ்மான் விருது பெற்ற அதே நாளில் அவருக்கு தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தாராம்.



And the Bonus :


ஒரு மேடையில் இரு தெய்வங்கள் 

இளையராஜா அவர்கள் ரஹ்மானைப் பற்றி சமீபத்தில் பேசுகையில், " M.S.V ஆதார ஸ்ருதி என்றால் நான் பஞ்சமம்,ரஹ்மான் சட்ஜமம்" என்றார்.



image

இது செம கலக்கல்.

"ஜெய் ஹோ" பாடல் முதலில் "யுவ்ராஜ்"  என்ற திரைப்படத்திற்காக இசை அமைத்த பாடல்.ஆனால் அதன் இயக்குனர் சுபாஷ்கை அவர்கள் அந்தப் பாடல் தனக்கு அவ்வளவு பிடிக்கவில்லை என்று கூறியதால் அந்த பாடல் இடம்பெறவில்லை. இப்பொழுது அப்பாடலுக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரம்!!!...




இது தான் Highlight






Thursday, February 26, 2009

மலரும் மழலையும்



மலர்களுக்கு இதழ்கள் உண்டு என்பதற்கு சான்று
மழலைச் சிரிப்பு!!!

முள்ளில்லாத ரோஜாவைப் பார்த்ததில்லையா?
குழந்தையின் இதழ்களைப் பாருங்கள்!!!

ரோஜாவிற்குள் முல்லையைப் பார்த்ததுண்டா?
(பல் முளைத்த)குழந்தைச் சிரிக்கும் போது பாருங்கள்

ரோஜா மலர்வதைப் பார்க்க வேண்டுமா?
குழந்தைச் சிரிப்பதைப் பாருங்கள்!!!




 

Monday, February 23, 2009

ACADEMY AWARD FOR OUR OWN RAHMAN

Tamil on oscar stage...Just wanted to shout the very moment i saw him getting the award..At the least i could do only this... "ellaap pugazhum iraivanukke"nnu sonna enga thala A.R.Rahman!!! vaazhga vaazhga....We r all so happy for you... CONGRATULATIONS CONGRATULATIONS ....

Thursday, February 5, 2009

பாலா - இளையராஜா

"நான் கடவுள்" திரைப்படப் பாடல்களை அனேகமாக அனைவருமே கேட்டிருப்போம். எல்லாப் பாடல்களுமே ஒரு வகையான சோகத்தை கொண்டு சேர்க்கும் வகையிலேயே அமைந்துள்ளது. மனதை நேரே வருடிச் செல்லும் இசை. ஆனால் அதில் இரு பாடல்களைப் பற்றி எனக்குத் தெரிந்த விஷயங்கள். 

1. சமீபத்தில் ஒரு பதிவைப் படிக்க நேர்ந்த பொழுது "மாதா உன் கோயிலில்" பாடல் 1978ல் "அச்சாணி" என்ற திரைப் படத்தில் இடம் பெற்ற பாடல் என்றும் அதைப் பாடியவர் ஜானகி என்றும் தெரிய வந்தது. அந்த பாடல் ஒலிப் பதிவின் போது Recording roomல் ஜானகி பாடிக் கொண்டு இருக்க, ஒரு சமயம் அவருடைய குரலின் இனிமையில் அப்படியே மற்ற கலைஞர்கள் வாசிப்பதை நிறுத்தி விடார்களாம். திடீர் என்று எந்த வாசிப்பும் இல்லாது குரல் மட்டும் கேட்க உள்ளிருந்து வெளியே வந்து பார்த்த போது தான் ராஜா அவர்களுக்குப் புரிந்திருக்கிறது அந்த அமைதி இனிய குரலுள் புதைந்ததற்கான சான்று என்று. இதைப் படித்துத் தெரிந்த பின்னும் நான் அந்த குரலைக் கேட்காமல் விடுவேனா?
http://www.thiraipaadal.com/TPplayer.asp?sngs=%27SNGIRR0104%27

துணுக்குச் செய்தி : இந்தப் பாடல், 'பயணங்கள் முடிவதில்லை' படத்தில் வரும் 'மணியோசை கேட்டு எழுந்தேன்' பாடலை நிச்சயம் நினைவு படுத்தும்.ஆனால் முதலில் வெளிவந்தது என்னவோ அச்சாணி திரைப்படம் தான்.

 
2. நான் கடவுள் படத்திலேயே "பிச்சைப்பாத்திரம்" எனும் பாடல் ராஜா அவர்களின் "ரமணமாலை"யில் இடம் பெற்றுள்ளது. இசைஞானியின் குரலில் கசிந்தொழுகும் அந்தப் பாடலை இதற்கு முன் நான் கேட்டதில்லை.ஆனால் "நான் கடவுள்" படத்தில் அதைக் கேட்ட பின் ரமணமாலையில் கேட்டேன். 
http://www.raaga.com/playerV31/index.asp?pick=9719&mode=3&rand=0.8459456275460461&bhcp=1

என்னடா ராஜா ஏன் ஏற்கனவே வேறு படத்தில் இடம்பெற்ற பாடல்களை இதில் தந்திருக்கிறார் என்று கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. அதற்குள் இதில் பூஜா பிச்சை எடுப்பவர் தானே!!! அவர் ஏற்கனவே தனக்குத் தெரிந்த பாடலைக் கூட பாடுவதாக ஒரு வேளை இது இருந்திருக்கலாமே என்ற எண்ணம் அதைத் தடுத்து நிறுத்தியது.  பாலா & ராஜா combo ஆச்சே சும்மாவா?!!!    

Thursday, January 29, 2009

Existing Death mystery of Netaji


              இரண்டு நாட்களுக்கு முன் ஆனந்த விகடன் படித்துக் கொண்டிருக்கும் போது திரு.சுபாஷ் சந்த்ர போஸ் அவர்களைப் பற்றிப் படிக்க நேரிட்டது. உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் எனக்கு அவரைப் பற்றி அதிகம் தெரியாது. பொதுவாக அறியப்பட்ட விஷயங்களில் ஒன்று அவருடைய மரணம் எப்படி நேர்ந்தது என்ற குழப்பம். எனக்கு அவரைப் பிடிக்குமா பிடிக்காத என்று கூட என்னால் சொல்ல முடியாது. ஆனால் அவருடைய இறப்பு ஒரு கேள்விக் குறியாகவே உள்ளது என்பது போல் முடிந்த அந்த கட்டுரை அவரைப் பற்றித் தெரிந்துக் கொள்ளும் ஆர்வத்தை அதிகப்படுத்தியது. நான் தேடிக் கிடைத்ததில் ஒரு சில இங்கே. இவ்வளவும் படித்த பிறகும் அவருடைய மரணம் மாயமாகவே இருப்பது தான் அதிசயம். 

 
ஆனந்த விகடன் : 26.1.1964  

கட்டுரையிலிருந்து சில துளிகள் :

                                January 23 1897 - August 18  1945

  

நேதாஜிக்குக் காந்திஜியின் அகிம்சை முறையில் நம்பிக்கை இல்லை. அதை ஒளிவு மறைவு இன்றி சொல்லவும் அவர் தயங்கவில்லை. அதே சமயம், சுதந்திரப் போராட்டத் திற்குக் காந்திஜியின் தலைமைதான் வேண்டும் என்பதிலும் அவருக்குச் சிறிதளவு சந்தேகமும் இருந்தது இல்லை. 1938-ல் இவர் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நாடு சுதந்திரமடையும் விஷயத்தில் சுபாஷ் மிக வேக மாகப் போகிறார் என்பது சிலரு டைய எண்ணம். 'காங்கிரஸ் ஸ்தாபனம் ஒரு போட்டி சர்க் காராகவே செயல்பட வேண்டும் என்றும், மிகப் பெரும் அளவில் ஒத்துழையாமை இயக்கத்தை நடத்த வேண்டும்' என்றும் இவர் கொண்டு வந்த கோரிக்கை யைக் காங்கிரஸ் மகா சபை நிராகரித்ததால், தன்னுடைய 62 ஆதரவாளர்களுடன் இவர் வெளியேறினார்.

1939-ல், காந்திஜியின் பேரா தரவுடன் காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட டாக்டர் பட்டாபி சீதாராமையாவை எதிர்த்து வெற்றி பெற்றார். 'பட்டாபியின் தோல்வி, என் தோல்வி' என்று காந்திஜி கூறியது இச்சமயத்தில்தான்.

காங்கிரஸ் மேலிடத்தாரிடம் கருத்து வேற்றுமை ஏற்பட்டதன் காரணத்தினால், ராஷ்டிரபதி பதவியை ராஜிநாமா செய்து விட்டு, 'ஃபார்வர்ட் பிளாக்' என்கிற புதிய கட்சியை அவர் தொடங்கினார்.

நேதாஜி தம் ஏழு தோழர்களுடன் சைகோன் போய்ச் சேர்ந்தார். அதற்குள் விமானப் போக்குவரத்தில் நெருக்கடி ஏற்பட்டுவிட்டது. அதனால், ஹபீபூர் ரஹ்மானை மட்டுமே அவரது இறுதி யாத்திரையில் உடன் அழைத்துச் செல்ல முடிந்தது.

இந்த விமானம்தான் 1945-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18-ம் தேதி, பார்மோஸா விலுள்ள டைஹேக்கு என்ற இடத்தில் விபத்துக்குள்ளாகி, நேதாஜியை மாய்த்து விட்டது.

அவர் அமரராகி விட்டார் என்பதில் எத்தனையோ கருத்து வேறுபாடு உண்டு. ஆனால், அவர் இந்திய சரித்திரத்தில் மட்டுமல்ல, இந்திய மக்களின் உள்ளங்களில் என்றென்றும் அமரராகவே விளங்குகிறார் என்பது மறுக்க இயலாத உண்மை!


                                                                                   January 23, 1897 - September 16, 1985

About Bhagwanji in "The Tribune" 


1955/56: Widowed Saraswati Devi and her son Rajkumar (50) come to live with her father Mahadeo Prasad Misra in Singar Nagar, Lucknow. Misra himself is staying with Bhagwanji.

Saraswati Devi and her son serve Bhagwanji until his death in 1985. They believe him to be Netaji.


April 1962: Atul Sen, an associate of Netaji, meets Bhagwanji in Neemsar. He takes him to be Netaji and on his return to Kolkata tells historian Dr RC Majumdar and INA Secret Service man Dr Pabitra Mohan Roy about the meeting. Dr Pabitra rushes to Neemsar at the end of the year. 

December 1962: Dr Pabitra approaches Netaji's friend and political associate Leela Roy for help in buying seven items Bhagwanji had wanted.

January 1963: Leela Roy establishes contact with Bhagwanji.


March 25, 1963: Srikant Sharma (93) becomes Leela Roy's and Bhagwanji's go-between. Bhagwanji shows himself to Sharma and tells him to convey to Leela Roy that it is not in the interest of the country for him to come out.

March 26, 1963: Possible date of Leela Roy's meeting with Bhagwanji. He hands over a letter demanding 12 items including cigars, a telescope and a Fowler's/Oxford dictionary.


September 1, 1964: Leela Roy writes to Netaji's closest friend Dilip Roy to say "he is alive-in India".

1965: Bhagwanji shifts to Lalkothi in Ayodhya.

1967: He moves to Shrista, Purani Basti, into the house of Basti King Onkar Singh. Here, Durga Prasad Pandey (83) comes into his contact. Pandey takes Bhagwanji to be Netaji. He meets him regularly for eight years.

1975: Bhagwanji shifts to Ayodhya. Durga Prasad Pandey travels with him in the same car. 

In his eight years' stay in Ayodhya, Bhagwanji changes places four times.

1975: Stays at Lucknow Hatta

1979: Litgation with house owner forces Bhagwanji to shift to Chhoti Deokali or Lucknow temple. (In the picture above).

September 16, 1985: Bhagwanji dies around 9 pm of cardio-vascular failure at the age of 88.
1986: Lalita Bose, M A Haleem and Vishwa Bandhu Tiwari (now in his 60s) move apetition for safe keeping of Bhagwanji's belongings. The UP High Court accepts, and all the objects are moved to the Faizabad treasury after they are listed.

November 26-28, 2001: Justice Manoj Kumar Mukherjee scrutinises Bhagwanji's belongings at the treasury in the District Magistrate's office in the presence of media. He earmarks some of these to be taken to the Commission's office in Kolkata.



                                                                   January 23, 1897 - 1946

Shyam Benegal’s film on Netaji has triggered a fresh debate on Subhas Chandra Bose. Lakshmi Sahgal, Netaji’s former associate and Commander of the INA’s Rani Jhansi regiment, was involved in the making of the film. In an exclusive interview with Shahira Naim, she throws new light on the issues that have surfaced again.

Sunday, June 12, 2005                                                                        

The Bose I knew is a memory now - Lakshmi Sahgal

 Excerpts:

Did you believe that Bose had indeed died in the crash?

Initially, we did not believe it as we had thought it was a decoy and Netaji had escaped. He always maintained that he would never be taken alive. He had approached the Soviet embassy in Tokyo and even as they awaited a response from Moscow, USSR had joined the war against Japan and that was the end of his hope to escape to the Soviet Union. I had felt that he may have managed to escape to Russia and had faked the crash to put the British off his trail. He had done such things earlier and it was completely possible.

When did reality sink in?

It was during the INA trial at Red Fort that I met Habibur Rahman who had been travelling with him in the aircraft and had survived the crash. He confirmed that Netaji had not died in the crash but from the extensive burn injuries that he suffered as a consequence of that crash. Even the Japanese doctor who had treated him had mentioned that there was a tall handsome Indian who had suffered 90 per cent burns and had succumbed to his injuries. At that time, the poor doctor did not known who his special patient was. That is when my INA colleagues and I started to believe that in all probability he was indeed no more.

And as far as the Taiwan government’s denial of any air crash during that period on its soil is concerned all I can say is that the Japanese had destroyed all records. They did not want one bit of paper to fall into the hands of the Allied forces that could prove as evidence for wartime crimes.

Recently declassified CIA, Russian Army’s and United Kingdom’s secret service reports have evidences of spotting Netaji after the crash. It suggests that in 1946, a year after the reported death of Netaji, Joseph Stalin and his cabinet were considering to give refuge to him in Russia.

Well I think it is time we got to the bottom of this controversy. The simplest thing to do is to take his ashes kept at the Renkoji Buddhist Temple in Tokyo and run a DNA match with his daughter. If it is proved that the ashes are indeed of Anita’s father it will settle this mystery for all times to come.

I remember when his nephew the late Sisir Bose had seen the urn at Renkoji Temple he had informed me that it had pieces of bones and even cartilage. This would make the running of the DNA test far easier.

Did you ever believe that he might be living incognito?

Such rumours were part of the building of the myth. Even if Netaji was alive and did not want to return to India after the war ended what was preventing him from living anywhere abroad? Many of his INA colleagues were settled aboard and he could have easily got in touch with any of us.

Again Sisir Bose had personally gone to meet all the babas that were rumoured to be his uncle. As far as Gumnami Baba of Faizabad was concerned, he told me that except for the gold-rimmed glasses there was nothing in common.

There was another baba in some village in rural Bengal who people claimed was Netaji. Sisir Bose wanted to hear him speak. He made four rounds to that village but the baba was always in maun.


                                                  January 23 1897 - ???


According to Rediff News :

Bose did not die in plane crash, affirms US intelligence

September 19, 2005 20:12 IST

A United States intelligence report, sent to the enquiry panel probing the disappearance of Netaji Subhash Chandra Bose, has corroborated the evidence provided by the Taiwan government that no air crash had occurred at Taipei airport or anywhere in that country on August 18, 1945, in which the Indian leader was supposed to have been killed.

In 1964 CIA thought Netaji was alive

In response to a questionnaire sent by Justice M K Mukherjee Commission to several countries, the US administration said there was no aircrash in Taiwan on the day when Netaji was supposed to have been killed in a plane crash at Taipei's Taihoku Airport, Bose's nephew and Forward Bloc MP, Subrata Bose, told reporters in New Delhi.

He also said the Union Home Ministry, during the tenure of L K Advani, had refused to give two files to the panel pertaining to the reported 1945 incident on the grounds that the information, if disclosed, would affect India's relations with some friendly countries.


      தான் இறந்து (இறந்ததாக நம்பப்பட்டு) 60 வருடங்களுக்கு மேலும் பல விவாதங்களுக்கும், விசாரணைகளுக்கும் உட்பட்டிருப்பவர் திரு.சுபாஷ் சந்த்ர போஸ் அவர்கள். அவருடைய வாழ்க்கை வரலாறு பலரால் எழுதப்பட்டாலும் முற்றுப் புள்ளி இன்றி இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

 

 
 

Thursday, January 22, 2009

Here is Crazy!!!

   


         என் அண்ணன் கல்யாணத்துக்கு திரு.க்ரேஸி மோகன் அவர்களையும் அழைத்திருந்தோம். அவர் எங்கள் மேல் வைத்த அன்பாலோ,என் தொல்லை தாங்க முடியாமலோ கல்யாணத்திற்கு வந்து இருந்தார்.அவரைப் போல் ஒரு simple மனிதரைப் பார்ப்பது கடினம். அவர் வந்ததும் எல்லோரும் கிட்டத் தட்ட அவரை சூழ்ந்தனர். அவரும் பொறுமையாக எல்லோருக்கும் பதில் சொல்லிக் கொண்டு இருந்தார்.அதில் எங்கள் உறவினர் ஒருவர் விடாது கேள்வி கேட்டு கொண்டு இருந்தார். 
அவர்களிடையே நடந்த உரையாடல்

உறவினர்: நீங்க எங்க சார் இருக்கீங்க?
க்ரேஸி : மைலாபூர்
உ..      : உங்க வீட்டு விலாசம் என்ன சார்?
க்ரேஸி: (எங்களை காட்டி)இவங்களுக்கு தெரியும்.அவங்க கிட்ட கேட்டால் சொல்லுவாங்க
உ...      : அப்போ உங்களுக்கு லெட்டர் போடணும்னா "க்ரேஸிமோகன், மைலபூர்"அப்படின்னு போட்டப் போதும் இல்ல சார்!
க்ரேஸி : (சற்று tired ஆகி) அது எப்படி சார்? க்ரேஸி மோகன்,மைலாபூர்னு போட்டா மைலாபூர் குளத்துக்கு தான் போகும்.சரியான address எழுதணும் சார்!

இதை கேட்டவுடன் எங்கள் எல்லோருக்கும் பயங்கர சிரிப்பு. சலிக்காமல் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொன்னதோடு மட்டும் நிற்காமல் அதை நகைசுவையோடும் சொன்ன க்ரேஸி சார் செம sooper...  



சொல்லத்தான் நினைக்கிறேன்




அன்று,,,

 காதலைச் சொன்னாய்;
 தயங்கினேன்:
"காத்திருக்கிறேன்" என்று சொல்ல நினைத்து!
"அணைக்க வா" என்றாய்;
 லேசாய்ச் சிரித்தேன்:
"நிச்சயமாக" என்று சொல்ல நினைத்து!
"முதல் முத்தம் எப்படி?" என்றாய்;
 வெட்கப்பட்டேன்:
"முதல் மழை போல்" என்று சொல்ல நினைத்து!
"மணம் எப்பொழுது?" என்றாய்;
 மனம் மகிழ்ந்தேன்;
"நாளைக்கே" என்று சொல்ல நினைத்து!


நான் உன்னிடம்,
"என் உயிர்:உலகம் எல்லாம் நீதான் என்று சொல்ல
(என் இதழை உன் இதழால் மறைத்தாய்)
சொல்லதான் நினைத்தேன்...

இன்று,,,

"காதலாய் இருக்கிறாயா?" என்கிறேன்;
 தயங்குகிறாய்;
காதலா?! என்று எண்ணுகிறாயோ!"
கட்டி அணைக்கவா?" என்கிறேன்;
 லேசாய்ச் சிரிக்கிறாய்;
வேறு வேலையைப் பார் என எண்ணுகிறாயோ?!
"முத்த மழை தர வா!" என்கிறேன் ;
 முறைக்கிறாய்;
முதலில் தூங்க விடு என எண்ணுகிறாயோ!
"என் மணம் புரிகிறதா?" என்கிறேன்;
 யோசிக்கிறாய்;
(திரு)மணம் புரிகிறது என எண்ணுகிறாயோ!
நிலவில் நடப்போமா என்கிறேன்;
 என்னை வெறிக்கிறாய்;
நிலவு சுடும் என்கிறாயோ?

அப்பொழுதும் இப்பொழுதும் எப்பொழுதும்நீதான் என் உலகம், உயிர் என்று சொல்ல...
(அருகில் ஆழ்ந்த உறக்கத்தில் நீ)  
சொல்லத்தான் நினைக்கிறேன்....


இப்படிக்கு,
அன்று முதல் இன்று வரை எதையுமே நினைக்க மட்டுமே முடியும்,

                                   'உன் கணவன்'...