Showing posts with label kavidhai. Show all posts
Showing posts with label kavidhai. Show all posts

Thursday, January 22, 2009

சொல்லத்தான் நினைக்கிறேன்




அன்று,,,

 காதலைச் சொன்னாய்;
 தயங்கினேன்:
"காத்திருக்கிறேன்" என்று சொல்ல நினைத்து!
"அணைக்க வா" என்றாய்;
 லேசாய்ச் சிரித்தேன்:
"நிச்சயமாக" என்று சொல்ல நினைத்து!
"முதல் முத்தம் எப்படி?" என்றாய்;
 வெட்கப்பட்டேன்:
"முதல் மழை போல்" என்று சொல்ல நினைத்து!
"மணம் எப்பொழுது?" என்றாய்;
 மனம் மகிழ்ந்தேன்;
"நாளைக்கே" என்று சொல்ல நினைத்து!


நான் உன்னிடம்,
"என் உயிர்:உலகம் எல்லாம் நீதான் என்று சொல்ல
(என் இதழை உன் இதழால் மறைத்தாய்)
சொல்லதான் நினைத்தேன்...

இன்று,,,

"காதலாய் இருக்கிறாயா?" என்கிறேன்;
 தயங்குகிறாய்;
காதலா?! என்று எண்ணுகிறாயோ!"
கட்டி அணைக்கவா?" என்கிறேன்;
 லேசாய்ச் சிரிக்கிறாய்;
வேறு வேலையைப் பார் என எண்ணுகிறாயோ?!
"முத்த மழை தர வா!" என்கிறேன் ;
 முறைக்கிறாய்;
முதலில் தூங்க விடு என எண்ணுகிறாயோ!
"என் மணம் புரிகிறதா?" என்கிறேன்;
 யோசிக்கிறாய்;
(திரு)மணம் புரிகிறது என எண்ணுகிறாயோ!
நிலவில் நடப்போமா என்கிறேன்;
 என்னை வெறிக்கிறாய்;
நிலவு சுடும் என்கிறாயோ?

அப்பொழுதும் இப்பொழுதும் எப்பொழுதும்நீதான் என் உலகம், உயிர் என்று சொல்ல...
(அருகில் ஆழ்ந்த உறக்கத்தில் நீ)  
சொல்லத்தான் நினைக்கிறேன்....


இப்படிக்கு,
அன்று முதல் இன்று வரை எதையுமே நினைக்க மட்டுமே முடியும்,

                                   'உன் கணவன்'...



       

Wednesday, December 3, 2008

கண்ணைப் பற்றி அண்ணன்

இன்னிக்கு ஒரு சில கவிதைகள்.என்னோடது இல்ல. நான் கவிதை எழுதணும்னா யோசிக்கணும் எனக்கு. ஆனா இந்த ஜீவனுக்கு அந்த rules எல்லாம் கிடையாது.அவன் தான் என் அண்ணா.

என்னோட அண்ணா புதுக்கவிதை மரபுக்கவிதைன்னு எல்லாம் பாகுபடுத்தாம அருமையா கவிதை எழுதுவான்.
என்ன தோணுதோ அதை பிசரு இல்லாம எழுதறதுல அவன் கில்லாடி. ஒரு சின்ன sample.

நம் சமுதாயத்திற்கு புதுக்கவிதை புனையும் இளைஞர்கள் வேண்டாம்
நம் சமுதாயம் புதுக்க விதை போடும் இளைஞர்களே வேண்டும்

இது ஒரு 2 நிமிஷத்துல சொன்னது.

எனக்கு என் அண்ணா எழுதினதுல ரொம்ப favourite கிட்டத்தட்ட 10 இல்ல 12 வருஷத்துக்கு முன்னால அவன் எழுதின கண்ணைப் பத்தின கவிதைதான்.


கலர் கலராய்க் கோடி வண்ணங்கள் காட்டும் கண்ணின் நிறம்
கறுப்பு வெள்ளை

இன்னும் எனக்கு அது மறக்கவே இல்லை.

இந்த துளிகளைப் பல நேரங்களில் நான் கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்திருக்கிறேன். அவன் எழுத்துக்களுக்கு முதல் விசிறி நான்.




அடுத்த பதிவு ஒரு சின்ன கதை..

இப்ப நான் எஸ்!!!
வர்ட்டா!!!