Thursday, January 22, 2009

சொல்லத்தான் நினைக்கிறேன்




அன்று,,,

 காதலைச் சொன்னாய்;
 தயங்கினேன்:
"காத்திருக்கிறேன்" என்று சொல்ல நினைத்து!
"அணைக்க வா" என்றாய்;
 லேசாய்ச் சிரித்தேன்:
"நிச்சயமாக" என்று சொல்ல நினைத்து!
"முதல் முத்தம் எப்படி?" என்றாய்;
 வெட்கப்பட்டேன்:
"முதல் மழை போல்" என்று சொல்ல நினைத்து!
"மணம் எப்பொழுது?" என்றாய்;
 மனம் மகிழ்ந்தேன்;
"நாளைக்கே" என்று சொல்ல நினைத்து!


நான் உன்னிடம்,
"என் உயிர்:உலகம் எல்லாம் நீதான் என்று சொல்ல
(என் இதழை உன் இதழால் மறைத்தாய்)
சொல்லதான் நினைத்தேன்...

இன்று,,,

"காதலாய் இருக்கிறாயா?" என்கிறேன்;
 தயங்குகிறாய்;
காதலா?! என்று எண்ணுகிறாயோ!"
கட்டி அணைக்கவா?" என்கிறேன்;
 லேசாய்ச் சிரிக்கிறாய்;
வேறு வேலையைப் பார் என எண்ணுகிறாயோ?!
"முத்த மழை தர வா!" என்கிறேன் ;
 முறைக்கிறாய்;
முதலில் தூங்க விடு என எண்ணுகிறாயோ!
"என் மணம் புரிகிறதா?" என்கிறேன்;
 யோசிக்கிறாய்;
(திரு)மணம் புரிகிறது என எண்ணுகிறாயோ!
நிலவில் நடப்போமா என்கிறேன்;
 என்னை வெறிக்கிறாய்;
நிலவு சுடும் என்கிறாயோ?

அப்பொழுதும் இப்பொழுதும் எப்பொழுதும்நீதான் என் உலகம், உயிர் என்று சொல்ல...
(அருகில் ஆழ்ந்த உறக்கத்தில் நீ)  
சொல்லத்தான் நினைக்கிறேன்....


இப்படிக்கு,
அன்று முதல் இன்று வரை எதையுமே நினைக்க மட்டுமே முடியும்,

                                   'உன் கணவன்'...



       

2 comments:

mee-and-mine said...

thumba chandha idhaye... really good one.. had good laugh :).. same time sindhikka vendiya vishayam...

SuryaRaj said...

Thanks...