என் அண்ணன் கல்யாணத்துக்கு திரு.க்ரேஸி மோகன் அவர்களையும் அழைத்திருந்தோம். அவர் எங்கள் மேல் வைத்த அன்பாலோ,என் தொல்லை தாங்க முடியாமலோ கல்யாணத்திற்கு வந்து இருந்தார்.அவரைப் போல் ஒரு simple மனிதரைப் பார்ப்பது கடினம். அவர் வந்ததும் எல்லோரும் கிட்டத் தட்ட அவரை சூழ்ந்தனர். அவரும் பொறுமையாக எல்லோருக்கும் பதில் சொல்லிக் கொண்டு இருந்தார்.அதில் எங்கள் உறவினர் ஒருவர் விடாது கேள்வி கேட்டு கொண்டு இருந்தார்.
அவர்களிடையே நடந்த உரையாடல்
உறவினர்: நீங்க எங்க சார் இருக்கீங்க?
க்ரேஸி : மைலாபூர்
உ.. : உங்க வீட்டு விலாசம் என்ன சார்?
க்ரேஸி: (எங்களை காட்டி)இவங்களுக்கு தெரியும்.அவங்க கிட்ட கேட்டால் சொல்லுவாங்க
உ... : அப்போ உங்களுக்கு லெட்டர் போடணும்னா "க்ரேஸிமோகன், மைலபூர்"அப்படின்னு போட்டப் போதும் இல்ல சார்!
க்ரேஸி : (சற்று tired ஆகி) அது எப்படி சார்? க்ரேஸி மோகன்,மைலாபூர்னு போட்டா மைலாபூர் குளத்துக்கு தான் போகும்.சரியான address எழுதணும் சார்!
இதை கேட்டவுடன் எங்கள் எல்லோருக்கும் பயங்கர சிரிப்பு. சலிக்காமல் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொன்னதோடு மட்டும் நிற்காமல் அதை நகைசுவையோடும் சொன்ன க்ரேஸி சார் செம sooper...
2 comments:
ha ha ha
Really good one. After long days im passin a comment right!!! :)
Post a Comment