Thursday, January 22, 2009

Here is Crazy!!!

   


         என் அண்ணன் கல்யாணத்துக்கு திரு.க்ரேஸி மோகன் அவர்களையும் அழைத்திருந்தோம். அவர் எங்கள் மேல் வைத்த அன்பாலோ,என் தொல்லை தாங்க முடியாமலோ கல்யாணத்திற்கு வந்து இருந்தார்.அவரைப் போல் ஒரு simple மனிதரைப் பார்ப்பது கடினம். அவர் வந்ததும் எல்லோரும் கிட்டத் தட்ட அவரை சூழ்ந்தனர். அவரும் பொறுமையாக எல்லோருக்கும் பதில் சொல்லிக் கொண்டு இருந்தார்.அதில் எங்கள் உறவினர் ஒருவர் விடாது கேள்வி கேட்டு கொண்டு இருந்தார். 
அவர்களிடையே நடந்த உரையாடல்

உறவினர்: நீங்க எங்க சார் இருக்கீங்க?
க்ரேஸி : மைலாபூர்
உ..      : உங்க வீட்டு விலாசம் என்ன சார்?
க்ரேஸி: (எங்களை காட்டி)இவங்களுக்கு தெரியும்.அவங்க கிட்ட கேட்டால் சொல்லுவாங்க
உ...      : அப்போ உங்களுக்கு லெட்டர் போடணும்னா "க்ரேஸிமோகன், மைலபூர்"அப்படின்னு போட்டப் போதும் இல்ல சார்!
க்ரேஸி : (சற்று tired ஆகி) அது எப்படி சார்? க்ரேஸி மோகன்,மைலாபூர்னு போட்டா மைலாபூர் குளத்துக்கு தான் போகும்.சரியான address எழுதணும் சார்!

இதை கேட்டவுடன் எங்கள் எல்லோருக்கும் பயங்கர சிரிப்பு. சலிக்காமல் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொன்னதோடு மட்டும் நிற்காமல் அதை நகைசுவையோடும் சொன்ன க்ரேஸி சார் செம sooper...  



சொல்லத்தான் நினைக்கிறேன்




அன்று,,,

 காதலைச் சொன்னாய்;
 தயங்கினேன்:
"காத்திருக்கிறேன்" என்று சொல்ல நினைத்து!
"அணைக்க வா" என்றாய்;
 லேசாய்ச் சிரித்தேன்:
"நிச்சயமாக" என்று சொல்ல நினைத்து!
"முதல் முத்தம் எப்படி?" என்றாய்;
 வெட்கப்பட்டேன்:
"முதல் மழை போல்" என்று சொல்ல நினைத்து!
"மணம் எப்பொழுது?" என்றாய்;
 மனம் மகிழ்ந்தேன்;
"நாளைக்கே" என்று சொல்ல நினைத்து!


நான் உன்னிடம்,
"என் உயிர்:உலகம் எல்லாம் நீதான் என்று சொல்ல
(என் இதழை உன் இதழால் மறைத்தாய்)
சொல்லதான் நினைத்தேன்...

இன்று,,,

"காதலாய் இருக்கிறாயா?" என்கிறேன்;
 தயங்குகிறாய்;
காதலா?! என்று எண்ணுகிறாயோ!"
கட்டி அணைக்கவா?" என்கிறேன்;
 லேசாய்ச் சிரிக்கிறாய்;
வேறு வேலையைப் பார் என எண்ணுகிறாயோ?!
"முத்த மழை தர வா!" என்கிறேன் ;
 முறைக்கிறாய்;
முதலில் தூங்க விடு என எண்ணுகிறாயோ!
"என் மணம் புரிகிறதா?" என்கிறேன்;
 யோசிக்கிறாய்;
(திரு)மணம் புரிகிறது என எண்ணுகிறாயோ!
நிலவில் நடப்போமா என்கிறேன்;
 என்னை வெறிக்கிறாய்;
நிலவு சுடும் என்கிறாயோ?

அப்பொழுதும் இப்பொழுதும் எப்பொழுதும்நீதான் என் உலகம், உயிர் என்று சொல்ல...
(அருகில் ஆழ்ந்த உறக்கத்தில் நீ)  
சொல்லத்தான் நினைக்கிறேன்....


இப்படிக்கு,
அன்று முதல் இன்று வரை எதையுமே நினைக்க மட்டுமே முடியும்,

                                   'உன் கணவன்'...



       

Wednesday, January 21, 2009

முரண்

                                         
      எனக்கு இந்த ஊரில் நடந்த இரு சிறு அனுபவங்கள்,ஆனால் முரணானவை. விஷயம் பாட்டிகளைப் பற்றியது. கொஞ்ச நாளைக்கு முன்னாடி நான் liftல் ஏறும்போது என்னுடன் ஒரு பாட்டி ஏறினார். கிட்டத் தட்ட ஒரு 70 வயது இருக்கும். ஆனால் நல்ல தெளிவு. பேச்சிலும் சரி, செயலிலும் சரி. நான் வெளியில் இருந்து வந்ததால் குளிரில் நடுங்கிக் கொண்டு இருந்தேன். அவர் என்னைப் பார்த்து ," Isn't it really cold outside?anything up to 0 degree F is fine for me" என்று ஒரு சிறு புன்முறுவலுடன் கூறினார். "இதெல்லாம் எனக்கு சப்ப குளிரு"என்று நினைத்தார் போலும். நானும் சிரித்து வைத்தேன். அவர் இறங்க வேண்டிய தளத்திலேயே நானும் இறங்கவிருந்ததைப் பார்த்து அவர் என் வீட்டு எண்ணைக் கேட்ட பின் தான் தெரிந்தது அவர் எங்கள் எதிர் வீட்டில் இருப்பவர் என்று. அவருடைய வயதைப் பார்த்துக் கொஞ்சம் எங்கிருந்தோ வந்த பாசம் என்னிடம் சேர்ந்ததால் அவரிடம், " I stay in this house, you can drop in anytime you wish to.I will be at home only "என்றேன். அவர் அதே மாறாத புன்னகையுடன்," but iam working" என்றார். எத்தனை விஷயங்களை அந்த ஒரு நொடியில் நான் உணர்ந்தேன் என்று எனக்கு மட்டுமே புரியும், தெரியும். என்ன ஒரு தன்னம்பிக்கை.அந்த ஒரு வரியிலேயே நீ வேண்டுமானால் வீட்டில் இருக்கலாம்.என்னால் எல்லாம் அப்படி இருக்க முடியாது என்று கூறாமல் கூறினார் ஆனால் புன்னகை மாறாத முகத்துடன்.இந்த வயதிலும் என்ன அழகு!என்று எண்ணிக் கொண்டேன்.

    அடுத்த நிகழ்வும் ஒரு பாட்டியுடன் தான் நடந்தது. நாங்கள் ஒரு libraryகுப் போய் இருந்தோம். எங்களுடைய friend உள்ளே சென்றிருந்ததால் வெளியே நின்று கொண்டு நானும் ராஜ்'ம் பேசிக் கொண்டு இருந்தோம்.அப்போழுது எதிர்பாராமல் நான்  சற்று சத்தமாக தும்மினேன். எனக்கே அதில் சிரிப்பு வந்தது. நாங்கள் அதைப் பற்றி சொல்லிப் பேசிக் கொண்டு இருந்த நேரம் ஒரு பாட்டி எங்கள் பின்னாலிருந்து எங்களைத் தள்ளாத குறையாக முந்தினார்.ஏதோ புலம்பிக் கொண்டே போனார்.முதலில் கவனிக்காத நாங்கள் சற்றே உன்னிப்பாகக் கேட்ட போது புரிந்தது அவர் என்னைத்தான் திட்டிக் கொண்டு இருந்தார் என்று. அவர் நான் தும்மியது போலவே பாவனை செய்து கொண்டே என்னமோ சொன்னார். எனக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது நான் அப்படி சத்தமாக தும்மி இருக்க கூடாது என்று. அவர் வெளியில் செல்லும்போது கதவருகே இருந்து என்னைப் பார்த்தார். நானும் நட்பாக ஒருமுறை புன்னகைத்தேன்.அதற்கு அவர் சிறு குழந்தைகள் முகம் காட்டுவது போல் என்னைப் பார்த்து முகம் காட்டி விட்டு நன்றாக முறைத்துக் கொண்டே சென்றார். அவர் செய்ததைப் பார்த்து எனக்கு மறுபடியும் சிரிப்பு தான் வந்தது. அதுவும் என்னைப் பார்த்து முகம் காட்டியவுடன் எனக்கு செம bulb ஆக இருந்தது. ஆனால் நான் சிரித்ததைப் பார்த்த அவர் மேலும் கடுப்பாகி என்னை என்ன என்னவோ சொல்லி திட்ட ஆரம்பித்து விட்டார். நல்ல வேளை எனக்கு அவர் பேசியது அவ்வளவாக(அவ்வளவுமே) புரியவில்லை. அவர் முறைத்த முறை மட்டும் மனதிலேயே இருந்தது. செ! என்ன தப்பு செய்தோம்! ஏன் இப்படி திட்டினார் என்று நினைத்துக் கொண்டே எங்கள் friend வந்ததும் கிளம்பினோம். நாங்கள் நடக்கும் போது பார்த்தால் அந்த பாட்டி எங்களுக்கு சற்று தொலைவில் நின்று கொண்டு என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்.இப்பவும் ஏதோ திட்டிக் கொண்டு தான் இருந்தார். எனக்கு இந்த முறை கொஞ்சம் கோபம் கூட வந்தது.ஆனால் பாட்டி தானே என்று பாசம் மறுபடியும். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.அவருக்கு என்னைப் பிடிக்கவில்லையா இல்லை என்னைப் போன்ற சில மக்களைப் பிடிக்கவில்லையா இல்லை இப்படி எல்லாம் அவர்களுடைய ஊரில் வந்து nuisance செய்கிறோமே என்ற ஆற்றாமையா தெரியவில்லை.அந்த கோபம் என்னைத் தாக்கியது எனக்குத் தெரிந்தது.அது நடந்து பல நாட்களுக்கு பிறகும் அதையே நினைத்துக் கொண்டு இருந்தேன்.

   இந்த இரண்டு பாட்டிகளிடமும் எனக்குப் பிடித்தது என்னவென்றால் அவர்கள் செய்ய நினைத்ததை(வேலையாக இருந்தாலும் சரி திட்டுவதாக இருந்தாலும் சரி) தெளிவாக செய்தனர். இந்த வயதிலும்,இந்த தள்ளாட்டத்திலும் என்ன ஒரு மனோதைர்யம். ஆனாலும் ஒரு பாட்டி காரணமே இல்லாமல் சொல்ல வந்ததை அன்பாக சொல்லியதும் இன்னொருவர் நான் எதுவும் செய்யாமலேயே என் மீது கோபம் காட்டியதும முரணாகத் தான் படுகிறது.
 

Friday, January 16, 2009

எனக்குப் பிடித்த பாடல்கள்(2008)

5. பாடல் சிவகாசி ரதியே
   பாடியவர் பெரிய கறுப்புத் தேவர்
   இசை S.S. குமரன்
   எழுதியவர் ஞானக் கரவேல்
   படம்  பூ

      இந்தப் பாடல் அருமையான பாடல் என்று வாதாடக் கூட அவ்வளவு விஷயங்கள் இல்லை. ஆனால் நிச்சயமாக நல்ல பாடல். கேட்டதும் முணுமுணுக்க வைத்து, புரிந்ததும் மெல்லிய புன்னகையை இதழில் விட்டுச் சென்ற வரிகள். "உன்ன எந்த காலம் பார்த்தது தாயி; இவ அந்த கால ஐஸ்வர்யா ராய்".இது தான் நான் கவனித்த முதல் வரி. சிணுங்கலும்,சேட்டையும் நிறைந்த பாடல். 

(bear with the ad.)



4.   பாடல் யாரோ மனதிலே
   பாடியவர்கள் பாம்பே ஜெயஸ்ரீ, கிரிஷ்
   இசை ஹாரிஸ் ஜெயராஜ்
   எழுதியவர் பா.விஜய்
   படம் தாம் தூம்
   
     இந்தப் பாடல் எனக்குப் பிடிக்க பெரிய காரணம் எதுவும் இல்லை. கேட்க இனிமையான பாடல். பாம்பே ஜெயஸ்ரீ அவர்களை ஏன் இப்படி எல்லப் பாடல்களையும் ஒரு மாதிரி Husky Voiceல் பாட வைக்கிறார்கள் என்று இந்த பாடலைக் கேட்ட பிறகும் தோன்றியது. ஆனாலும் மென்மையான பாடல்.



3.   பாடல் ஆவாரம் பூ
     பாடியவர் சின்மயி
     இசை S.S.குமரன்
   எழுதியவர் நா.முத்துகுமார் 
     படம் பூ

       முதல் முறைக் கேட்டதும் இந்தப் பாடலைப் பாடிய குரல் என்னை ஈர்த்தது. கொஞ்ச நாளைக்குப் பிறகு இதன் வரிகள் இந்தப் படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஏன் திரை இசைப் பாடலில் "ஆவாரம் பூ" காத்திருக்கும் ஒரு மலராகவே இருந்து வருகிறது என்று இன்று வரை புரியவில்லை.(உ.ம்) ஆவாரம் பூவு ஆரேழு நாளா, ராசாவே உன்ன நா எண்ணித்தான் பாடலில் வரும் 'ஆவாரம் பூவு அதுக்கொரு நோவு:உன்ன நெனச்சு காத்துக் கெடக்கு'என்ற வரி. ஆவாரம் பூ வரும் பாடல்கள் எல்லாமே நன்றாகத் தான் இருக்கிறது. இந்தப் பாடலில் எனக்குப் பிடித்த வரி 'சொந்த வேரோடு தான் கொண்ட காதலினை அது சொல்லாமல் போனாலும் புரியாதா?'  மனம் கணக்கும் வரிகள்.

(bear with the ad)


 இரண்டு பாடல்கள் 2ம் இடத்தில். 

a) பாடல் மருதாணி
   பாடியவர்கள் மதுஸ்ரீ,A.R.ரகுமான்,ஹென்ரி
   இசை A.R.ரகுமான்
   எழுதியவர் வாலி
   படம் சக்கரக்கட்டி

     மறுபடியும் ஒரு காதல் பாடல். அசத்தும் இசை,அழகான குரல்,இசையுடனே பயணம் செய்யும் chorus என்று காதில் ரம்மியமாக ஒலிக்கும் இந்தப் பாடல். மயிலிறகால் மனதை வருடும் ஒரு உணர்வை ஏற்படுத்தும் இதன் இசையும், குரலும். மதுஸ்ரீயின் தமிழ் உச்சரிப்பு மட்டும் கொஞ்சம் கஷ்டப்படுத்தும்.ஆனாலும் அவர் குரல் அதை மறைத்து விடுகிறது. A.R.ரகுமானை நினைத்து நினைத்து ஆச்சர்யப் பட வைக்கிறது இந்தப் பாடல்(லும்).


b)   பாடல் ஆழியிலே முக்குளிக்கும் அழகே
     பாடியவர் ஹரிசரண்
     இசை ஹாரிஸ் ஜெயராஜ்
     எழுதியவர் நா.முத்துகுமார்
     படம் தாம் தூம்
 
   குரல்,வரி,லேசான இசை இந்த மூன்றும் இந்தப் பாடலின் அழகு. காதலி மீது காற்றாகவும்,இச்சென்று இதழ் வைக்கவும் ஆசைப்படும் காதலன் பாடும் பாடல். பாடல் முடிந்த பிறகும் காதில் ரீங்கரிக்கும் பாடல்.


1.   பாடல் கண்டும் காணாமல்
     பாடியவர் சாதனா சர்கம்
     இசை வித்யாசாகர்
     எழுதியவர் யுகபாரதி
     படம் பிரிவோம் சந்திப்போம்
 
   மென்மையான இசை, இழையோடும் சிறு சோகம், இனிய குரல். அழகிய வரிகள் என்று எல்லாமே சேர்ந்து இந்த பாடலை என் மனதில் ஆழப் பதிய வைத்து விட்டன.
     "விடைகளைத் தேடும் ஆவலில் கேள்வி போல் நாளும் தேங்கினோம்"
     "மாறுதல் ஆறுதல் ஆகுமே!"
     தனிமையின் வாட்டம் காதலர்களை எப்படித் தாக்கும் என்று சொல்லும் பாடல்களைத் தான் நாம் அதிகம் கேட்டுள்ளோம்.ஆனால் இந்தப் பாடலில் சொல்லி இருக்கும் பிரிவின் வேதனை காதல், காமம் அல்லாத பாசம் மட்டுமே நிறைந்த மற்ற உறவுகளைப் பிரிந்ததால் தோன்றியது. அதை இவ்வளவு மென்மையான குரலில் ஆழமான வார்த்தைகளில் தந்திருப்பதால் என் listல் சென்ற ஆண்டின் முதல் இடம் இந்தப் பாடலுக்குத் தான். 



இவை எல்லாம் தனித் தனியாக எனக்குப் பிடித்த பாடல்கள்.

எல்லாப் பாடல்களும் அழகாக அமைந்து ஒட்டு மொத்தமாக என் மனதை அள்ளிக் கொண்ட Album "சக்கரக்கட்டி". ஒவ்வொரு பாடலிலும் ஏதாவது ஒரு சிறப்பு இருக்கும். A.R.ரகுமான் எவ்வளவு நல்ல பாடல்கள் தந்தாலும் அதைக் கெடுக்கும் இயக்குனர்களை என்னவென்று சொல்வது? 

Just miss பாடல்கள்:

    இந்தப் பாடல்களைத் தவிர வேறு சில பாடல்களும் எனக்குப் பிடித்திருந்தது.

   கண்டேன் கண்டேன் -- பிரிவோம் சந்திப்போம் படத்தில் வரும் அருமையான பாடல். ஒவ்வொரு முறை கேட்கும் போதும் நின்று முழுப் பாடலும்  முடிந்த பிறகு தான் நகரத் தோன்றும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்திய பாடல். ஆனால் கேட்ட மாதிரியே இருந்த இசை தான் இது என் listல் முதல் 5 இடங்களில் வரத்தவரக் காரணம்.அதுவே இந்தப் பாடல் பிடிக்கவும் காரணமாக இருக்கலாம்.

   கல்லை மட்டும் -- இந்தப் பாடல் மட்டும் மலையாளப் பாடலைத் தழுவியது என்று தெரியாமல் இருந்திருந்தால் முதலிடம் இந்தப் பாடலுக்குத் தான் தந்திருப்பேன். வாலியின் தீவிர ரசிகை நான். அது ஒன்றே போதுமாக இருந்தது எனக்கு இந்தப் பாடல் பிடிக்க. ஆத்திகத்தை ஆதிக்கக் குரலில் தந்து ஆழமாக மனதில் நிற்க வைத்ததோடு மட்டும் நிற்காமல் ஒவ்வொரு வரியின் அர்த்தத்தையும் தேட வைத்த இந்தப் பாடல் நிஜமாகவே அருமையான பாடல் தான். ஆனால் இசை அவ்வளவு பிரமாதமாக இல்லை என்பது ஒரு குறை தான். ஹரிஹரன் அவர்களின் குரலில் இருந்த கம்பீரம் பெரிய பலம்.

   அஞ்சல -- கார்த்திக்கின் ஈர்க்கும் குரல் மட்டுமே இந்தப் பாடலின் பலமாக நான் நினைக்கிறேன். சொல்வதற்கென்று வேறு எதுவும் இல்லை இந்தப் பாடலைப் பற்றி.
  
    நாக்கு மொக்க -- செம mass பாடல் தான். தாரை தப்பட்டை பிஞ்சும் அளவு அடிபட்டிருக்கும் பாடல்.ஆனாலும் எனக்கு இந்த பாடலில் சில விஷயங்கள் பிடித்திருந்தது. முதலில் குரல். சின்னப்பொண்ணு என்று யாரோ பாடி இருக்கிறார். கேட்கப்படாத வரிகள் இந்தப் பாடலைத் திரும்பக் கேட்க வைத்தது. Radioவில் ஒலித்த முதல் நாளே எல்லோரையும் பேச வைத்த பாடல். கேட்கக் கேட்க வெறுப்பு தான் வந்தது.ஆனால் அந்த முதல் impression தந்த பிரமிப்பு இன்னும் போகவில்லை.  

  சூ சூ மாரி -- இந்தப் பாடலைப் பற்றி ஒரு பதிவே எழுதி இருப்பதால் இங்கு அவ்வளவாக வேண்டாம். சேட்டை நிறைந்த நல்ல பாடல்.   

 
  

 

Thursday, January 15, 2009

மொக்கை Hits:

  2008ல் வந்த பாடல்களில் சில நினைக்க முடியாத அளவிற்கு HIT. அதில் நான் கொஞ்சம் too muchனு நினைக்கிற பாடல்களின் list இங்கே.

Where is the party:

   என்ன இருக்கு இந்த பாட்டுல? படு கேவலமான ஆட்டம். தற்கொலை பண்ணிக்கத் தூண்டற lyrics. அபஸ்வர குரல். ஏதோ இசை கொஞ்சம் பரவாயில்லை ஒரு mass பாடலுக்கு. அதுலயும் இந்த சிம்புவின் பேட்டிகளை கேட்டதுக்கு அப்புறம் ஏதோ கொஞ்ச நஞ்சம் போனாப் போகுதுன்னு பொறுத்ததும் wasteங்கற முடிவுக்கு வந்தாச்சு.


கனவிலே கனவிலே:(நேபாளி)

    எங்கேயோ கேட்ட பாடல். அது இந்த பாடலுக்குத் தகுந்த வரி தான். கேட்டதாகவே இருந்தாலும் கொஞ்சமாவது justification கொடுத்து இருக்கலாம். ஒரு பக்கம் குரல் ஒலிக்கும் ஒரு பக்கம் சம்பந்தமே இல்லாமல் "சக் சக்" என்று செருப்பு தேய்க்கும் சத்தம்.அது தான் rhythmமாம்.என்னவோ போங்கப்பா.


கத்தாழக் கண்ணாலே:(அஞ்சாதே)

    வால மீனுக்கும் வரிசையில் வந்த அடுத்த கொடுமை. அதே வரிசயில் இந்த பாடல் hit வேற. என்ன தான் இருந்தாலும் மாளவிகா இல்லாதது ஒரு குறை தான். இருந்திருந்தால் அந்தக் கொடுமையையும் சகிக்க வேண்டி இருந்திருக்கும். ஒண்ணும் சொல்வதற்கு இல்லை இந்தப் பாடலைப் பற்றி.


பாட்டு உன் கண்களில்:(தசாவதாரம்)

    கமல் தான் ஹீரோ சரி, கமல் தான் பாடினார் சரி, உணர்ச்சி பொங்கும் வரிகள் சரி. பயங்கர எதிர்பார்ப்பு வெற்றி கொடுத்த படம் சரி, ஆனால் இதற்காகவெல்லாம் இந்த மாதிரி பாடல்களை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இந்தப் பாடல் ஏதோ அதி அருமையான பாடல் என்று இதற்கு remix என்ற பெயரில் மறுபடியும் கொலை வேறு.


எப்படி இருந்த என் மனசு:(சந்தோஷ் சுப்ரமணியம்)

    தெலுங்கு படத்த தமிழ்ல எடுதாங்க ரெண்டுத்தையும் பார்த்தோம், அதே பாடல்கள் சிலதை இதிலும் போட்டார்கள் அதையும் பார்த்தோம். ஆனால் ஒரே மாதிரி பாடலை முழுவதுமாக இரண்டு முறை ஒரே படத்தில் போட்டுப் பார்க்க வைத்தது அவர்கள் தப்பு என்றால் அந்த இரண்டையுமே Hit ஆக்கிய நம்மை என்ன சொல்வது?


நிலா நிலா ஓடி வா:(நாயகன்)

     கமல்-மணிரத்னம் படத்தோட பெயரை வைத்துக் கொண்டு இந்தப் படத்தில் செய்த அழிச்சாட்டியம் போதாதென்று இந்த பாட்டு வேறு. ஏம்பா எங்க பொறுமையை சோதிக்கறீங்க? இந்தப் படம் உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக பொங்கல் அன்று கலைஞர் டிவியில் வேறு ஒளிபரப்பினார்கள். அந்தப் பாடலை முதல் முறையாக முழுதும் பார்க்கக் கூடிய பாக்கியம் கிடைத்ததில் இருந்து நான் கிட்டத் தட்ட ஞானியாகி விட்டேன்.


டண்டணக்கா:(காளை)

    தாங்க முடியாத அளவிற்குக் கொடுமை தந்த பாடல்களில் ஒன்று இந்தப் பாடல்.ஆனால் Hit. யாரைக் குறை சொல்வதென்றே தெரியவில்லை. 


யாரும் என்னிடம் சொல்லாத வார்த்தை:(பழனி)

    பரத் இந்தப் பாடலுக்கு எப்படியாவது ஆட முயற்சி செய்தார். ஆனால் அது தோல்வி தான். இசை என்று ஒன்று இருந்தால் தானே அதன் தாளத்திற்கேற்பக் கால்கள் ஆட முடியும். இதை இசையின் வரிசையில் கூட சேர்க்க முடியாது.


இங்கு குறிப்பிட்டுள்ள பாடல்கள் எல்லாம் எனக்குத் தெரிந்த வரை சென்ற ஆண்டின் மொக்கை hits. இந்தப் பாடல்களை ஹிட் செய்தது மக்களா இல்லை அதை மறுபடி மறுபடி ஒளிபரப்பி மறக்க நினைத்தால் கூட விடாமல் கொடுமைப் படுத்திய தனியார் தொலைகாட்சிகளா தெரியவில்லை. ஆனால் இந்தப் பாடல்களைக் கேட்டால் "நெஞ்சுப் பொறுக்குதில்லையே!!!"  
   

Monday, January 12, 2009

GLODEN GLOBE FOR A.R.REHMAN!!!

A.R.REHMAN proves himself breaking all the barriers...Who can deny that he is a genius?Yeah yeah...It is about Slumdog Millionaire. Magical Music and finally been recognised. why on earth shouldn't we be proud after knowing this? When Raj took me to this movie on nov 14th,i had very very little clue about this movie. All i was told by him was A.R.R has scored music for this movie. That was more than enough for him to convince me to watch that movie. The movie was awesome,needless to say.Have any doubt? see all known and unknown movie sites for the review.!!! But i never expected the BGM will be this applaudable. It was too good. And I enjoyed all the pieces in that movie. Infact i listened to this music in trailer some three or four months back in some blog. Thanks to that X guy who made me know about this movie and music. Iammmmmmmmm Happpyyyyyyy.What more..
                   OOOOHHH SAYYYOOOO SAYOOOOOOOOO...JAY HO!!! JAY HO  Rehman !!!


Thursday, January 1, 2009

வருக வருக புது வருடமே!

            இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!