Showing posts with label kadhai. Show all posts
Showing posts with label kadhai. Show all posts

Friday, December 19, 2008

அவனா நீ?

                                           
இது ஒரு விபத்து, விபரீதம் எப்படிச் சொல்வது? நாளை முதல் நான் எப்படி மத்தவங்களைப் பார்ப்பேன்?

என்ன வேலை செஞ்சிட்ட டா? என்று என் நண்பன் என்னை உலுக்கிய போது தான் நான் செய்த காரியத்தின் தீவிரம் கொஞ்சம் உரைத்தது எனக்கு.
ஒரு நாளுக்கு முன்னாடி நான் இதோ என் முன்னால இருக்கும் பல பேர்ல ஒருத்தனா ஒரு சாதரண மனுஷனாத்தான் இருந்தேன்?
ஏன் எனக்கு இந்த ஒரு நிலைமை? எல்லாத்துக்கும் காரணம் என்னோட அவசர புத்திதான்... இனி என்னோட வாழ்க்கை? ஹய்யோ அவசரத்துல இப்படி ஒரு வேலை செய்ய எப்படி முடிஞ்சது என்னால? 

நான் 26 வயதான middle class குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சராசரி ஆண்.ஒரு சராசரி ஆள்.என் வயதுள்ள பல பேரைப் போல் எனக்கும் நல்ல படிப்பு,நல்ல வேலை,அப்பா அம்மா சொல்லும் பெண்ணைத் திருமணம்,நல்ல வாழ்க்கை என்று சின்ன சின்ன ஆசைகள்(?!!!) தான் இருந்தது. அதில் பாதி கிணற்றைத் தாண்டினேன். மற்றவை என் வாழ்வில் நடப்பதற்குள் இதோ இது நடந்து விட்டது...
 
இன்று காலை எப்பவும் போல் நான் officeக்குக் கிளம்பினேன். கிட்டத் தட்ட 5000 பேர் பணிபுரியும் இடம் அது. ஆனால் அதில் எனக்கு ஸ்ரீராம் மட்டும் தான் ஒரே நண்பன். எனக்கு நடந்த இந்த விபரீதம் இன்று இதில் வேறு யாருக்காவது நடந்திருந்தால்? நினைக்கவே முடியலை...இந்த வேலைக்கு நான் தான் கிடைச்சேனா அந்த கடவுளுக்கு?

என்னுடன் வேலை செய்பவள் ஹேமா. அவளைப் பார்த்து goodmorning சொல்லி விட்டு நான் என்னுடைய cabinக்கு செல்ல முற்பட்டேன். அவள் என்னை இடை மறித்து "எனக்கு ஒரு சின்ன problem, lunch timeல கொஞ்சம் உன் கூட தனியா பேசணும்"என்றாள். நானும் சரி என்றேன். அதற்குப் பிறகு நான் அதைப் பத்தி மறந்தே போய்விட்டேன். ஒரு 2 மணி இருக்கும். coffee குடிக்கும்போது அவளைப் பார்த்தேன்.அப்போது தான் அவள் ஏதோ ப்ரச்சனை என்று சொன்னது ஞாபகம் வந்தது. அவள் கோபமாக இருந்தாள். நான் அவளிடம் போய்," Iam very sorry hema.ஏதோ வேலைல மறந்துட்டேன்" என்றேன் குற்ற உணர்வு மேலிட. அவள் இப்பவாவது பேசலாமா சார்?"என்றாள். நானும் "கண்டிப்பா" என்றேன்.

நாங்கள் ஒரு மூலையைத் தேர்ந்து எடுத்து அமர்ந்தோம். அப்போது தான் அந்த விபரீதம் நடந்தது.அந்த ஒரு கணம் இனி என்னோட வாழ்க்கையின் மொத்தத்தையும் மாற்றி அமைக்கப் போகிறது என்று எனக்கு அப்போ ஒரு சின்ன clue கூட இல்லை.

ஸ்ரீராம் என்னை மறுபடியும் நம்ப முடியாமல் பார்த்தான். "நீயா டா இப்படி? நீ ரொம்ப பயந்தவன் அப்படின்னு தான டா நான் நினைச்சேன்?எப்படி டா?இனிமேல அவ்வளவு தான்..உன்னோட வாழ்க்கையைப் பத்தி கொஞ்சமாவது யோசிச்சியாடா?என்றான்.
"என்ன என்னடா பண்ண சொல்ற?"என்று கத்தினேன். என்ன என்னடா பண்ண சொல்ற? நான் என்ன கொலையா பண்ணிட்டேன்?அவ என்னப் பார்த்து, என் கையைப் பிடிச்சிட்டு I LOVE YOU சொல்லுவான்னு எனக்கே தெரியாது டா. நானும் ஒரு சாதாரண மனுஷன் தானடா? அவள மாதிரி ஒரு பொண்ணு வந்து இப்படி சொல்லும்போது நான் எப்படி டா மறுக்க முடியும்?அதான் உடனே சரின்னு சொல்லிட்டேன்.அதுக்கு போய் ஏன்டா என்னை இப்படி கலாய்க்கற? எனக்கு என்றும் இல்லாத வெட்கம்.

இனிமேல என் வாழ்க்கை எப்படி எல்லாம் மாறப்போகுதோ?! ஆம்.இது ஒரு விபத்து தான் ஆனால் இனிய விபத்து.இனிமையான விபரீதம்.நாளை முதல் நான் எப்படி மத்தவங்களைப் பார்ப்பேன்?எல்லோரும் இவனப் போலவே கிண்டல் பண்ணித் தீர்த்துடுவாங்களே!!! ஆனா நல்ல வேளை இது என்னோட ஆபீஸ்ல வேற யாருக்கும் நடக்கல என்று மகிழ்ந்தேன்.என்னைத் தேர்ந்து எடுத்த கடவுளுக்கு கோடி நன்றி...
இதோ என்னுடைய cell phone சிணுங்குது. ஹேமாவாகத்தான் இருக்கும்.
நான் வர்ட்டா!!!