Thursday, February 5, 2009

பாலா - இளையராஜா

"நான் கடவுள்" திரைப்படப் பாடல்களை அனேகமாக அனைவருமே கேட்டிருப்போம். எல்லாப் பாடல்களுமே ஒரு வகையான சோகத்தை கொண்டு சேர்க்கும் வகையிலேயே அமைந்துள்ளது. மனதை நேரே வருடிச் செல்லும் இசை. ஆனால் அதில் இரு பாடல்களைப் பற்றி எனக்குத் தெரிந்த விஷயங்கள். 

1. சமீபத்தில் ஒரு பதிவைப் படிக்க நேர்ந்த பொழுது "மாதா உன் கோயிலில்" பாடல் 1978ல் "அச்சாணி" என்ற திரைப் படத்தில் இடம் பெற்ற பாடல் என்றும் அதைப் பாடியவர் ஜானகி என்றும் தெரிய வந்தது. அந்த பாடல் ஒலிப் பதிவின் போது Recording roomல் ஜானகி பாடிக் கொண்டு இருக்க, ஒரு சமயம் அவருடைய குரலின் இனிமையில் அப்படியே மற்ற கலைஞர்கள் வாசிப்பதை நிறுத்தி விடார்களாம். திடீர் என்று எந்த வாசிப்பும் இல்லாது குரல் மட்டும் கேட்க உள்ளிருந்து வெளியே வந்து பார்த்த போது தான் ராஜா அவர்களுக்குப் புரிந்திருக்கிறது அந்த அமைதி இனிய குரலுள் புதைந்ததற்கான சான்று என்று. இதைப் படித்துத் தெரிந்த பின்னும் நான் அந்த குரலைக் கேட்காமல் விடுவேனா?
http://www.thiraipaadal.com/TPplayer.asp?sngs=%27SNGIRR0104%27

துணுக்குச் செய்தி : இந்தப் பாடல், 'பயணங்கள் முடிவதில்லை' படத்தில் வரும் 'மணியோசை கேட்டு எழுந்தேன்' பாடலை நிச்சயம் நினைவு படுத்தும்.ஆனால் முதலில் வெளிவந்தது என்னவோ அச்சாணி திரைப்படம் தான்.

 
2. நான் கடவுள் படத்திலேயே "பிச்சைப்பாத்திரம்" எனும் பாடல் ராஜா அவர்களின் "ரமணமாலை"யில் இடம் பெற்றுள்ளது. இசைஞானியின் குரலில் கசிந்தொழுகும் அந்தப் பாடலை இதற்கு முன் நான் கேட்டதில்லை.ஆனால் "நான் கடவுள்" படத்தில் அதைக் கேட்ட பின் ரமணமாலையில் கேட்டேன். 
http://www.raaga.com/playerV31/index.asp?pick=9719&mode=3&rand=0.8459456275460461&bhcp=1

என்னடா ராஜா ஏன் ஏற்கனவே வேறு படத்தில் இடம்பெற்ற பாடல்களை இதில் தந்திருக்கிறார் என்று கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. அதற்குள் இதில் பூஜா பிச்சை எடுப்பவர் தானே!!! அவர் ஏற்கனவே தனக்குத் தெரிந்த பாடலைக் கூட பாடுவதாக ஒரு வேளை இது இருந்திருக்கலாமே என்ற எண்ணம் அதைத் தடுத்து நிறுத்தியது.  பாலா & ராஜா combo ஆச்சே சும்மாவா?!!!    

1 comment:

Anonymous said...

சூர்யா

நானும் நான் கடவுள் பாடல்கள் கேட்டேன்.நன்றாக இருந்தது.அவை ஒரு விதமான சோக உண்ர்வை ஏற்ப்படுடத்துவதாக உள்ளன.நீ இந்த வலைப்பூவில் தரும் விஷயங்கள் மிகவும் நன்றாக உள்ளன.
பாராட்டுக்கள்.