Monday, December 29, 2008

சூ சூ மாரி!!!

கொஞ்ச நாளுக்கு முன்னாடி கலைஞர் டி.வில ஓரு பாட்டைக் கேட்டேன். சின்னப் பசங்க எல்லாம் சேர்ந்து கூத்து அடிக்கற பாட்டு தான். வெயில் படத்தோட வெயிலோடு விளையாடி, அழகி படத்துல வரும் டமக்கு டமக்கு டம் பாட்டு மாதிரியே இதுலயும் சின்ன பசங்க எல்லாம் சேர்ந்து செய்யும் அட்டகாசம் தான் highlight. எனக்கு வெயிலோடு விளையாடி பாட்டு ரொம்ப பிடிக்கும். அதுல இழையோடற ஒரு நூலிழை சோகம் தான் அந்த பாட்டை ரசிக்க வெச்சது. 
        ஆனா இந்த "சூ சூ மாரி" பாட்டுல இருக்கற அழகு அந்த குரல். எதுவுமே முக்கியம் இல்லைன்னு விட்டேத்தியான ஒரு குரல். ஆனா பாடற பாட்டோட சுவை குறையாம இருக்கறதுக்கு உதவினதே அந்த விட்டேத்தியான குரல் தான். என்ன ஆழம்!! "சூ சூ மாரி" அப்படின்னு இழுத்து பாடும்போது அப்படியே அந்த குரல் நம்மள அந்த பாட்டுக்குள்ள இழுத்துட்டுப் போவது தான் உண்மை...அந்த குட்டிய வேற ஒரு நிகழ்ச்சில பார்க்க முடிஞ்சது.அதுல கிறித்துமஸ் தாத்தா ஒரு tongue twisterஅ சொல்ல எல்லா சின்ன பசங்களும் அப்படியே நா பிறழாம சொல்லணும். இந்த பொண்ணுக்கு முறை வந்ததும் சர்வ சாதாரணமா சொல்லிட்டு ஒரு சின்ன smile வேற செஞ்சிது. அப்பறம் ஒரு பாட்டு பாட சொன்னதும் இந்த பாட்டைத் தான் பாடி காமிச்சது அந்த பொண்ணு.அப்போ தான் தெரிஞ்சது அந்தப் பாடலோட குரலுக்கு சொந்தக்காரி யாருன்னு. நா பிறழாம குரல் பிசுறாம அந்த சின்ன பொண்ணு பாடி இருக்கற அழகே தனி. பெருசா ஒண்ணும் கலக்கற music எல்லாம் கிடையாது. பெரிய காட்சி அமைப்பு எல்லாம் கிடையாது. இருந்தாலும் சின்ன சின்ன ரசிக்கக்கூடிய விஷயங்கள் அந்தப் பாட்டுல நிச்சயமா இருக்கு. அதுல ஒரு சின்னப் பையன் காமெராவப் பார்த்து பார்த்து பேசற விதம் soopero sooper. நல்ல சேட்டை. குச்சி iceஅ சாப்பிட்டுட்டே அந்த பையன் காமெராவப் பார்த்து உனக்கு வேணுமா?வேணாம்னாப் போ..! அப்படின்னு சொல்லிட்டு போறது செம டமாசு...இந்தப் பாட்டு அந்த படத்தோட அருமையான பாடலும் இல்லை. "ஆவாரம் பூ" பாட்டுக்கு தான் என்னோட ஓட்டு...இருந்தாலும் இந்த பாட்டைப் பத்தி எழுதணும்னு ஏதோ ஒரு எண்ணம்...அதான்..

ஓகே..வர்ட்டா!!!

No comments: