ஆம்..இது என்னுடைய முதல் தீபாவளி தான். வேறு மண்ணில். நிச்சயமாக தாய் நாட்டுப் பற்று பற்றி எல்லாம் நான் பேசப்போவதில்லை.
oct 25th(சனிக்கிழமை) அன்று நாங்கள் எல்லோரும் பரபரப்பாக இயங்கினோம். அன்றுதான் எங்களுக்கு தீபாவளி. பல்வேறு இனிப்பு,சமையல்,வீட்டு அலங்காரம் என நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் ஓடிக் கொண்டு இருந்தோம். மாலை நண்பர்களை வீட்டிற்கு அழைத்து இருந்தோம். நாங்களும் நகை ,பட்டுப் புடவை ,குர்தா சகிதமாக எங்களை அலங்கரித்துக் கொண்டோம். ஒவ்வொருவராக வர, நாங்கள் வாழ்த்துக்களையும்,இனிப்புவகைகளையும் பரிமாறிக்கொண்டோம். மனைவி,மத்தாப்பு சகிதமாக கணவர்கள் குழந்தைகளையும் cameraவையும் கவனித்துக் கொண்டு இருந்தனர். அப்புறம் dinner. அதற்குப் பிறகு பாட்டுக்குப் பாட்டு என நன்றாகத் தான் முடிந்தது எங்கள் தீபாவலி. ஆனால் இத்தனை காலமாக நாங்கள் கொண்டாடி வந்த நாள் இப்படி இருக்காதே.!!!
இத்தனை வருடங்களாக ஒரு கொண்டாட்டத்தை ரசித்து விட்டு,அனுபவித்து விட்டு இன்று தீபாளியை தீபாவளியன்று கூட கொண்டாட முடியாமல் weekendல் கொண்டாடி முடித்து இருக்கிறோம். நிச்சயமாக குடும்பமாகத் தான் எல்லோரும் ஆர்ப்பரித்தோம்.
ஆனால் உண்மை என்னவென்றால்,
அந்த ஆரவாரத்தில் மனம் ஆழவில்லை
அந்த மகிழ்ச்சியில் ஒரு உயிர் இல்லை,
அந்த கொண்டாட்டத்தில் குதூகலம் இல்லை
ஆனாலும் நாங்கள் தீபாவலி கொண்டாடினோம்.
எங்களுக்குத் தான் இது புதுமையாக இருந்தது. பல வருடங்களாக இங்கு இருந்து வரும் என்னுடைய சில உறவினர்களைப் போல் இங்கு பலப் பல மக்கள். அவர்களுடைய முகத்தில் தான் எத்தனை சந்தோஷம்!!! உற்றுப் பார்த்தால் அவர்களிடம் ஒரு acceptance தெரிந்தது. இது தான் தங்களுடைய சந்தோஷம் என்று நன்றாக உணர்ந்த்திருந்தார்கள்.
அந்த கணம் ஒரு உண்மை என்னைச் சுட்டது.
ஒரு வேளை நாங்களும் நாளை இதே போல் மாறிவிடுவோமா? எல்லா சந்தோஷங்களுமே எங்களுக்கும் இப்படி ஒரு acceptanceன் விளைவாகத் தான் இருக்குமோ? ஆனால் அப்படியும் இல்லாவிட்டால் இங்கு எல்லாம் ஏது வேறு கதி?
அதனால் நாங்கள் தீபாவலி கொண்டாடினோம்.
மறுநாள்(ஞாயிறு-இன்று) மாலை(இந்தியாவில் திங்கள் காலை) எங்கள் phone செய்யும் வேலை ஆரம்பித்தது. பேசினோம்,பேசினோம்,பேசிக்கொண்டே இருந்தோம். எங்கள் உதட்டில் பேசப் பேச ஒரு புன்னகை. எங்கள் முகத்தில்
ஒரு பூரிப்பு. ஏதோ அவர்கள் எல்லோரும் எங்களைச் சுற்றியே இருப்பது போல் ஒரு மகிழ்ச்சி.
அன்று இனிப்பு இருந்தது, மக்கள் இருந்தார்கள், பட்டாசு இருந்தது, புத்தம் புது ஆடைகள் இருந்தன.ஆனாலும் என்னமோ missing. இத்தனை வருடங்களாக இவற்றில் எது இருந்தாலும், இல்லை என்றாலும் அந்த கொண்டாட்டத்தில் ஒரு உண்மை இருந்தது.
இன்று வந்த இந்த புன்னகையும்,பூரிப்பும் எங்கள் முகத்தில் அன்று இல்லை. அப்பொழுது தான் உறைத்தது எங்களுக்கு தீபாவளி இன்று தான் என்று.