எனக்கு இந்த ஊரில் நடந்த இரு சிறு அனுபவங்கள்,ஆனால் முரணானவை. விஷயம் பாட்டிகளைப் பற்றியது. கொஞ்ச நாளைக்கு முன்னாடி நான் liftல் ஏறும்போது என்னுடன் ஒரு பாட்டி ஏறினார். கிட்டத் தட்ட ஒரு 70 வயது இருக்கும். ஆனால் நல்ல தெளிவு. பேச்சிலும் சரி, செயலிலும் சரி. நான் வெளியில் இருந்து வந்ததால் குளிரில் நடுங்கிக் கொண்டு இருந்தேன். அவர் என்னைப் பார்த்து ," Isn't it really cold outside?anything up to 0 degree F is fine for me" என்று ஒரு சிறு புன்முறுவலுடன் கூறினார். "இதெல்லாம் எனக்கு சப்ப குளிரு"என்று நினைத்தார் போலும். நானும் சிரித்து வைத்தேன். அவர் இறங்க வேண்டிய தளத்திலேயே நானும் இறங்கவிருந்ததைப் பார்த்து அவர் என் வீட்டு எண்ணைக் கேட்ட பின் தான் தெரிந்தது அவர் எங்கள் எதிர் வீட்டில் இருப்பவர் என்று. அவருடைய வயதைப் பார்த்துக் கொஞ்சம் எங்கிருந்தோ வந்த பாசம் என்னிடம் சேர்ந்ததால் அவரிடம், " I stay in this house, you can drop in anytime you wish to.I will be at home only "என்றேன். அவர் அதே மாறாத புன்னகையுடன்," but iam working" என்றார். எத்தனை விஷயங்களை அந்த ஒரு நொடியில் நான் உணர்ந்தேன் என்று எனக்கு மட்டுமே புரியும், தெரியும். என்ன ஒரு தன்னம்பிக்கை.அந்த ஒரு வரியிலேயே நீ வேண்டுமானால் வீட்டில் இருக்கலாம்.என்னால் எல்லாம் அப்படி இருக்க முடியாது என்று கூறாமல் கூறினார் ஆனால் புன்னகை மாறாத முகத்துடன்.இந்த வயதிலும் என்ன அழகு!என்று எண்ணிக் கொண்டேன்.
அடுத்த நிகழ்வும் ஒரு பாட்டியுடன் தான் நடந்தது. நாங்கள் ஒரு libraryகுப் போய் இருந்தோம். எங்களுடைய friend உள்ளே சென்றிருந்ததால் வெளியே நின்று கொண்டு நானும் ராஜ்'ம் பேசிக் கொண்டு இருந்தோம்.அப்போழுது எதிர்பாராமல் நான் சற்று சத்தமாக தும்மினேன். எனக்கே அதில் சிரிப்பு வந்தது. நாங்கள் அதைப் பற்றி சொல்லிப் பேசிக் கொண்டு இருந்த நேரம் ஒரு பாட்டி எங்கள் பின்னாலிருந்து எங்களைத் தள்ளாத குறையாக முந்தினார்.ஏதோ புலம்பிக் கொண்டே போனார்.முதலில் கவனிக்காத நாங்கள் சற்றே உன்னிப்பாகக் கேட்ட போது புரிந்தது அவர் என்னைத்தான் திட்டிக் கொண்டு இருந்தார் என்று. அவர் நான் தும்மியது போலவே பாவனை செய்து கொண்டே என்னமோ சொன்னார். எனக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது நான் அப்படி சத்தமாக தும்மி இருக்க கூடாது என்று. அவர் வெளியில் செல்லும்போது கதவருகே இருந்து என்னைப் பார்த்தார். நானும் நட்பாக ஒருமுறை புன்னகைத்தேன்.அதற்கு அவர் சிறு குழந்தைகள் முகம் காட்டுவது போல் என்னைப் பார்த்து முகம் காட்டி விட்டு நன்றாக முறைத்துக் கொண்டே சென்றார். அவர் செய்ததைப் பார்த்து எனக்கு மறுபடியும் சிரிப்பு தான் வந்தது. அதுவும் என்னைப் பார்த்து முகம் காட்டியவுடன் எனக்கு செம bulb ஆக இருந்தது. ஆனால் நான் சிரித்ததைப் பார்த்த அவர் மேலும் கடுப்பாகி என்னை என்ன என்னவோ சொல்லி திட்ட ஆரம்பித்து விட்டார். நல்ல வேளை எனக்கு அவர் பேசியது அவ்வளவாக(அவ்வளவுமே) புரியவில்லை. அவர் முறைத்த முறை மட்டும் மனதிலேயே இருந்தது. செ! என்ன தப்பு செய்தோம்! ஏன் இப்படி திட்டினார் என்று நினைத்துக் கொண்டே எங்கள் friend வந்ததும் கிளம்பினோம். நாங்கள் நடக்கும் போது பார்த்தால் அந்த பாட்டி எங்களுக்கு சற்று தொலைவில் நின்று கொண்டு என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்.இப்பவும் ஏதோ திட்டிக் கொண்டு தான் இருந்தார். எனக்கு இந்த முறை கொஞ்சம் கோபம் கூட வந்தது.ஆனால் பாட்டி தானே என்று பாசம் மறுபடியும். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.அவருக்கு என்னைப் பிடிக்கவில்லையா இல்லை என்னைப் போன்ற சில மக்களைப் பிடிக்கவில்லையா இல்லை இப்படி எல்லாம் அவர்களுடைய ஊரில் வந்து nuisance செய்கிறோமே என்ற ஆற்றாமையா தெரியவில்லை.அந்த கோபம் என்னைத் தாக்கியது எனக்குத் தெரிந்தது.அது நடந்து பல நாட்களுக்கு பிறகும் அதையே நினைத்துக் கொண்டு இருந்தேன்.
இந்த இரண்டு பாட்டிகளிடமும் எனக்குப் பிடித்தது என்னவென்றால் அவர்கள் செய்ய நினைத்ததை(வேலையாக இருந்தாலும் சரி திட்டுவதாக இருந்தாலும் சரி) தெளிவாக செய்தனர். இந்த வயதிலும்,இந்த தள்ளாட்டத்திலும் என்ன ஒரு மனோதைர்யம். ஆனாலும் ஒரு பாட்டி காரணமே இல்லாமல் சொல்ல வந்ததை அன்பாக சொல்லியதும் இன்னொருவர் நான் எதுவும் செய்யாமலேயே என் மீது கோபம் காட்டியதும முரணாகத் தான் படுகிறது.
3 comments:
good one Surya... first paati asathitaanga... I cud imagine the way she told... !!
first paatti rocks!
second paatti talks :)
---idhu Suresh oda comment...
True. First paatti still stands in my mind. Suresh Bava's comment is actually gud.
Surya
The incidents was good experience for u na.But u see nee naga poyum tittu vangarennu ninaichaa romba comedy-ya irukku dee.
bye sasivairam
Post a Comment